நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் வெளியீடு:புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 873 வாக்காளர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 873 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

2 நகராட்சிகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு தேவையான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 280 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன.

வாக்காளர்களை பொறுத்தவரையில் புதுக்கோட்டை நகராட்சியில் 60 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்கள், 64 ஆயிரத்து 984 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரத்து 669 வாக்காளர்களும், அறந்தாங்கி நகராட்சியில் 16 ஆயிரத்து 573 ஆண் வாக்காளர்கள், 18 ஆயிரத்து 65 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 34 ஆயிரத்து 638 வாக்காளர்களும் என நகராட்சிகளில் 77 ஆயிரத்து 241 ஆண் வாக்காளர்கள், 83 ஆயிரத்து 49 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 307 வாக்காளர்கள் உள்ளனர்.
8 பேரூராட்சிகள்
பேரூராட்சிகளில் பொறுத்தவரையில் ஆலங்குடி பேரூராட்சியில் 4 ஆயிரத்து 815 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 917 பெண் வாக்காளர்கள் என 9 ஆயிரத்து 732 வாக்காளர்களும், அன்னவாசல் பேரூராட்சியில் 3 ஆயிரத்து 727 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 789 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என 7 ஆயிரத்து 517 வாக்காளர்களும், அரிமளம் பேரூராட்சியில் 3 ஆயிரத்து 480 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 751 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என 7 ஆயிரத்து 232 வாக்காளர்களும், இலுப்பூர் பேரூராட்சியில் 5 ஆயிரத்து 887 ஆண் வாக்காளர்கள், 6 ஆயிரத்து 094 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என 11 ஆயிரத்து 982 வாக்காளர்களும், கறம்பக்குடி பேரூராட்சியில் 6 ஆயிரத்து 447 ஆண் வாக்காளர்கள், 6 ஆயிரத்து 546 பெண் வாக்காளர்கள் என 12 ஆயிரத்து 993 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் கீரமங்கலம் பேரூராட்சியில் 3 ஆயிரத்து 828 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 952 பெண் வாக்காளர்கள் என 7 ஆயிரத்து 780 வாக்காளர்களும், கீரனூர் பேரூராட்சியில் 4 ஆயிரத்து 591 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 847 பெண் வாக்காளர்கள் என 9 ஆயிரத்து 438 வாக்காளர்களும், பொன்னமராவதி பேரூராட்சியில் 5 ஆயிரத்து 261 ஆண் வாக்காளர்கள், 5 ஆயிரத்து 631 பெண் வாக்காளர்கள் என 10 ஆயிரத்து 892 வாக்காளர்களும் என பேரூராட்சிகளில் 38 ஆயிரத்து 36 ஆண் வாக்காளர்கள், 39 ஆயிரத்து 527 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 77 ஆயிரத்து 566 வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்த வாக்காளர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 277 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 576 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 873 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் 45 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு இந்த பதற்றமான வாக்குசாவடிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) கிருஷ்ணமூர்த்தி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments