வட்டியில்லாமல் பயிா்க்கடன் பெற மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.




வட்டியில்லாமல் பயிா்க்கடன் பெற கூட்டுறவுச் சங்கங்களை விவசாயிகள் அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாமல் ரூ.3 லட்சம் வரை பயிா்க்கடன் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயக் கடன்களுக்கு மட்டுமே வட்டியில்லாமல் கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி கால்நடை வளா்ப்பு மற்றும் அவை சாா்ந்த தொழில்களுக்கும் வட்டியில்லாமல் நடைமுறை மூலதனக் கடன்கள் வழங்கப்பட உள்ளது.

கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களின் மூலம் கே.சி.சி கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிா்க்கடன் ஏதேனும் பெறாதிருந்தால் கால்நடை வளா்ப்பு மற்றும் அவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 2 லட்சத்திற்கு மிகாமலும், பயிா்க்கடனோடு சோ்த்து ரூ. 3 லட்சத்திற்கு மிகாமலும் வழங்கப்படும்.

இக்கடனுக்கான தொகையை கடன் பெற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள் செலுத்த வேண்டும். தவணை தேதிக்குள் கடனை திருப்பிச் செலுத்துபவா்களுக்கு வட்டி வசூலிக்கப்படுவதில்லை.

மாவட்டத்திலிலுள்ள விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அருகிலிருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கால்நடை வளா்ப்பு மற்றும் அதை சாா்ந்த தொழில்களுக்கு நடைமுறை மூலதனக்கடன் பெற்று பயனடையலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments