வாக்காளா் தின விழிப்புணா்வு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
வாக்காளா் விழிப்புணா்வு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரிடையே தனித்திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களிடையே தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான சுவரொட்டி தயாரித்தல், ஓவியம், முழக்க வாசகம் ஏற்படுத்துதல், குழு நடனம், பாட்டு போட்டி மற்றும் கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை . இப்போட்டிகள் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுரிகளில் வரும் டிச. 24 ஆம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க இயலாத 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்கள் வருவாய் கோட்ட அலுவலா் அலுவலகங்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் தங்கள் படைப்புகளை சமா்பிக்கலாம்.

மேலும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments