புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு பெண் அதிகாரி பொறுப்பேற்பு: மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி!



புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பெண் அதிகாரிகள் அதிகம் பேர் நிர்வகித்து வருகின்றனர்.

குறிப்பாக மாவட்ட நிர்வாகத்தின் கலெக்டராக கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டாக நிஷா பார்த்திபன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல நீதித்துறையிலும் மகிளா கோர்ட்டில் நீதிபதி சத்யா உள்பட பெண் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சிலர் பணியாற்றுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலராக பானுப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக அபிநயா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக கீதா, செரீனா பேகம் உள்பட தாசில்தார்களிலும், வருவாய்த்துறைகளிலும், அரசு துறைகள், போலீஸ் துறைகளில் பல்வேறு பணியிடங்களில் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

இந்த நிலையில் பெண் அதிகாரிகளில் பணியாற்றி வரும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மேலும் ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டார். அதாவது மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த சரவணன், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் அங்காடி மேலாண்மை குழும மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி ஆணையரக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆணையராக பணியாற்றி வந்த செல்வி, புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் அவர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் செல்விக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் பெண் அதிகாரிகளின் ஆளுமையின் கீழ் செயல்படுவதை எண்ணி பெண்கள் பெருமைஅடைந்துள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments