மீமிசல் அருகே வயலில் இறந்த நிலையில் முதியவர் சடலம் மீட்பு: கொலையா? தற்கொலையா? என போலீஸார் விசாரணை...மீமிசல் அருகே ஆலத்தூர் கீழ குடியிருப்பு கிராமத்தின் சாலை அருகே உள்ள வயலில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே ஆலத்தூர் கீழ குடியிருப்பு கிராமத்தின் சாலை அருகே உள்ள வயலில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது.

இவர் வீட்டை விட்டு வெளியேறி 2 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், மீமிசல் கடைவீதியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments