இதில் கலெக்டர் கவிதாராமு பேசுகையில், ‘‘மழையளவை பொறுத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 754.66 மில்லி மீட்டர் ஆகும். நவம்பர் மாதம் வரைக்கும் பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 678.50 மி.மீ. க்கு பதிலாக 1,170.4 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. இது இயல்பான மழையளவைவிட 72 சதவீதம் கூடுதலாகும். நவம்பர் மாதம் மட்டும் பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவு 133.53 மி.மீ.க்கு பதிலாக 317.1 மி.மீ இதுவரை பதிவாகியுள்ளது.
பயிர் சேதத்தை பொறுத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 76,539 எக்டேர் சாகுபடி பரப்பளவில் தற்போது பெய்துவரும் மழையினால் 2,289.57 எக்டேர் நீரில் மூழ்கியுள்ளது.
இதில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக 1,617.335 எக்டேர் நெற்பயிரானது பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 2,766 பேர் ஆவர். இதே போல் மக்காச்சோளத்தில் 308 எக்டேர் பரப்பு நீரில் மூழ்கியுள்ளதில் 33 சதவீதத்திற்கு மேலாக 83.92 எக்டேர் பரப்பும், 117 விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். உளுந்து மற்றும் நிலக்கடலைப் பயிர்களில் முறையே 6.4 எக்டேர் மற்றும் 24 எக்டேர் பரப்பு நீரில் மூழ்கியுள்ள நிலையில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக உளுந்து 4.4 எக்டேர் பரப்பும், நிலக்கடலை 23.63 எக்டேர் பரப்பும் பாதிப்படைந்துள்ளது.
இதுவரை பெய்த கனமழையால் 2,628.63 எக்டேர் பரப்பில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் 1,729.29 எக்டேர் பரப்பில் பயிர்கள் 33 சதவீதத்திற்கும் அதிகமாகப் பாதிப்படைந்துள்ளன. மேலும், வட்டார வாரியாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது’’ என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.