நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒட்டகப்பால் – அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்!



ஒட்டக இறைச்சியும், ஒட்டகப் பாலும் மருத்துவ குணம் நிறைந்தது என்றும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும், அமெரிக்க ஆராய்ச்சியாளர் கிறிஸ்டினா ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு ஒட்டகப் பால் கொடுக்கப் பட்டதாகவும், அதன் பலனை நன்கு உணர்ந்ததாகவும் தெரிவித்த கிறிஸ்டினா இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
 
ஆட்டிசம் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ள கிறிஸ்டினா, ஒட்டகம் மற்றும் இறைச்சியின் நன்மைகள் கற்பனை செய்ய முடியாதவை என்று கண்டறிந்துள்ளார். மேலும் தன் மகனின் காரணமாக, ஒட்டகங்களின் நன்மைகள் மற்றும் முக்கியத்துவத்தை அடையாளம் காண நிறைய அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் தெரிவிக்கையில், ஒட்டகம் ஒரு பழங்கால விலங்கு. முற்காலத்தில் ஒட்டகங்கள் பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. அவற்றின் மதிப்பு அரேபிய பழங்குடியினருக்கு நன்கு தெரியும். துரதிர்ஷ்டவசமாக, உலகில் ஒட்டகங்களைப் பற்றிய புத்தகங்கள் மிகக் குறைவு என்றார்.

இதுகுறித்து கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச மாநாட்டில், விளக்கிய கிறிஸ்டினா, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனுக்கு ஒட்டகப் பாலை பயன்படுத்தியதில் அதனை உணர்ந்தேன். ஆட்டிசம் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, ​​​​5 ஆண்டுகள் இந்த விசயத்தை ஆராய்ச்சி செய்தேன்” என்றார். மேலும் ஆட்டிசம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர் மருத்துவமனைகளுக்கு ஒட்டகப் பாலை பரிந்துரைப்பதாகவும் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments