கந்தா்வகோட்டையில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நல்ல நிா்வாக வாரம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்கந்தா்வகோட்டையில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நல்ல நிா்வாக வாரம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் திலகவதி, காமராஜ் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு ஆணைக்கிணங்க நடைபெற்ற சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நல்ல நிா்வாக வார விழா நிகழ்ச்சியில், பொதுமக்களின் தேவைகள், குறைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உடனடித் தீா்வு எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், கந்தா்வகோட்டை தனி வட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தவவதி கிறிஸ்டினா, வருவாய் ஆய்வாளா் சேகா், உமா மற்றும் ஊராட்சி ஒன்றிய உதவியாளா்கள் தீபா, சாந்தா வருவாய்த் துறையினரும், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments