அதிராம்பட்டினம் கடற்பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் அழிந்து வருவதால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது. எனவே அலையாத்தி காடுகள் மீண்டும் புத்தூயிர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் அழிந்து வருவதால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது. எனவே அலையாத்தி காடுகள் மீண்டும் புத்தூயிர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் வளம் பாதிப்பு
ஆசிய கண்டத்திலேயே அலையாத்தி காடுகள் உள்ள ஒரே பகுதி தமிழ்நாடு தான். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளை உலுக்கி பல உயிர்களை பலி வாங்கிய சுனாமி தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட கடல் பகுதிகளை நெருங்காமல் மக்களை காப்பாற்றியது அலையாத்தி காடுகள் தான். கஜா புயல் அன்று வீசிய காற்றால் பெரும்பாலும் அலையாத்தி மரங்கள் வேரோடு சாய்ந்தது. தற்போது அதிராம்பட்டினம் கடற்கரை ஓரங்களில் அலையாத்தி காடுகள் அழிந்து வருவதால் கடல் வளமும் பாதிக்கப்படுகிறது.
இறால் நண்டு, மீன் ஆகியவை இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி மரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல தண்ணீரும், உப்பு தண்ணீரும் சேரும் இடங்களில் அலையாத்தி காடுகள் உள்ளதால் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி மரங்களின் வேர் பகுதிகளை நாடி வருகிறது. எனவே அழிந்து வரும் அலையாத்தி காடுகளை மீண்டும் புத்தூயிர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் அலையாத்தி மரங்களை கடற்கரை ஓரங்களில் வளர்ந்தால் மீன், நண்டு ஆகியவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.
இறால் அதிகம் கிடைக்கிறது
இதுபற்றி மீனவர்கள் கூறுகையில்,
ஒரு காலத்தில் தஞ்சை கடல் பகுதியில் கொடிகட்டி பறந்த மீன்பிடித்தொழில் தற்போது நலிவடைந்து விட்டதற்கு முக்கிய காரணம் கடல்வளம் குறைந்தது தான். எனவே கடல் வளம் கூடவேண்டும் என்றால் அலையாத்தி காடுகளைப் பராமரிக்க வேண்டும். கடலில் மீன் உற்பத்திக்கு அலையாத்தி மரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அலையாத்தி இலைகள் மக்கி கடலில் கலப்பதால் அதில் உள்ள உயிரினங்களுக்கு இது உணவாக பயன்படுகிறது. இறால் மற்றும் நண்டு வகைகள் அலையாத்தி காடுகள் உள்ள பகுதிகளில் உற்பத்தி அதிகம் இருக்கும். இதனால் தான் அதிராம்பட்டினம் கடல்பகுதியில் இறால் அதிகம் கிடைக்கிறது என்றனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.