புதுக்கோட்டை வழியாக செல்லும் அஜ்மீர் - இராமேஸ்வரம் 'ஹம்சபார்'. வாராந்திர ரயில் மீண்டும் இயக்கம்

புதுக்கோட்டை வழியாக செல்லும் அஜ்மீர் - இராமேஸ்வரம்  'ஹம்சபார்'. வாராந்திர ரயில் மீண்டும் இயக்கப்படுகின்றது.

➤18/12/21(சனி) முதல் அஜ்மீரத்திலிருந்தும் 

➤21/12/21(செவ்வாய்) முதல் ராமேஸ்வரத்திலிருந்து இந்த ரயில் இயங்க தொடங்கும்.

ராமேஸ்வரம்-திருச்சி வழித்தடத்தில் ராமேஸ்வரம், மானாமதுரை, திருச்சி உள்ளிட்ட 3 ரயில்நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்றும் செல்லும் என்பதால் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணிக்க நினைப்பவர்கள்  புதுக்கோட்டையிலிருந்து செவ்வாய் இரவு(புதன்) 12:05 மணிக்கு புறப்படும் 22662/ ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் 'சேது' ரயில் சென்னை எழும்பூருக்கு காலை 07:15 மணிக்கு செல்லும், சென்னை எழும்பூரிலிருந்து காலை 08:45 மணிக்கு புறப்படும் இந்த 20974/ராமேஸ்வரம்-அஜ்மீர் 'ஹம்சபார்' ரயிலின் மூலம் விஜயவாடா, நாக்பூர் இடராசி, போபால், அஜ்மீர் போன்ற பகுதிகளுக்கு செல்லாம். இவ்வாறு பயணிக்க தொடர்பயணமாக(Onward Journey) ஆக ஒரே படிவதை பூர்த்தி செய்து  புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

குறிப்பு:

புதுக்கோட்டை வழியாக சென்று புதுக்கோட்டையில் நிற்கமால் செல்லும் பனாரஸ், அயோத்தி ரயில்களை போல இந்த அஜ்மீர் ரயிலும் புதுக்கோட்டையில் நிற்காது என்பது குறிப்பிடத்தக்கது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments