நாட்டுச்சேரியில் ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த முப்படைத் தளபதி உட்பட இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது..


சாக்கோட்டை ஒன்றியம்
நாட்டுச்சேரியில் ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் தம்பதியினர்  மற்றும் இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன..

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் நாட்டுச்சேரியில் முப்படைத் தலைமைதளபதி உள்ளிட்ட இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக டிசம்பர் 13 திங்கட்கிழமை அன்று
புன்னகை அறக்கட்டளையின் நிறுவனர் ஆ.சே.கலைபிரபு தலைமையில்
காவல்துறை அதிகாரி பார்த்திபன் முன்னிலையில் அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழ்மரம் நட்டல் திட்டத்தில் 
புன்னகை அறக்கட்டளையின் அறங்காவலர் அப்பாசாமி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் சிவகங்கை மாவட்ட தலைவர் சிவசங்கர்,திட்ட ஒருங்கினைப்பாளர்,
விக்னேஷ்,குருதிகொடை ஒருங்கினைப்பாளர் சிரஞ்சீவி, சாக்கோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தீபன், சிவராமன், தினேஷ் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments