புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினரால் மது தொடர்பான குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலம் விடப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினரால் மது தொடர்பான குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலம் விடப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் மது தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர வாகனம் -3, மூன்று சக்கர வாகனம் -1 மற்றும் இருசக்கர வாகனம் 20 ஆக மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் தானியங்கி பணிமனை அவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு  28.12.2021 ஆம் தேதி காலை 08.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அமைக்கப்பட்ட குழு முன்னிலையில் பகிரங்க ஏலம் விடப்பட்டத்தில் 24 வாகனங்களை மொத்த தொகை GST உட்பட்ட ரூபாய் 9,98,760/- பெறப்பட்டுள்ளது . 

மேற்படி தொகையானது அரசு கணக்கில் சேர்க்கப்படும்.மேலும் மேற்படி ஏலத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜெரீனாபேகம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு புதுக்கோட்டை, மாவட்ட உதவி ஆணையர் ( கலால் ), புதுக்கோட்டை வணிகவரித்துறை உதவி ஆணையர் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி அரசு தானியங்கி பணிமணை உதவி செயற்பொறியாளர் அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் முன்னிலையில் வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments