அறந்தாங்கியில் SDPI கட்சி சார்பில் டிசம்பா் 6- பாபா் மசூதி இடிப்பு தின கண்டன ஆா்ப்பாட்டம்






அறந்தாங்கியில் SDPI கட்சி சார்பில் டிசம்பா் 6- பாபா் மசூதி இடிப்பு தின கண்டன ஆா்ப்பாட்டம்!

டிசம்பர் 06 போராட்டம் ஓயாது பாபரி மீண்டும் எழும் வரை மாபெரும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தேசம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று நடத்தப்பட்டது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி இல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SAM அரஃபாத் தலைமை தாங்கினார் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் கட்சியின் கிளை அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வைக்க பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி நகர துணைத்தலைவர் முகமது அபூதாலிப் வரவேற்புரை நிகழ்த்தினார் மாநில செயலாளர் A.அபூபக்கர் சித்தீக் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் சகோதரர் U.  செய்யது அகமது அவர்கள் மற்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை மாநில செயலாளர் T.கலை முரசு மற்றும் மாநில பொது குழு உறுப்பினர்
BM இப்ராஹீம் காசிமி
மற்றும் CPI  மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.P லோகநாதன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் R. அப்துல் ரஹ்மான்
அவர்களும் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக்கா மாவட்ட துணை தலைவர் PMS முகமது குலாம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

இவன்
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments