உள்ளூர் மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் குபா தெரு (தோப்பு ரோடு) 11-வது‌‌ வீதியை சேர்ந்த காதர் பாட்சா அவர்கள்



கோபாலப்பட்டிணம் குபா தெரு (தோப்பு ரோடு) 11-வது வீதியை சேர்ந்த மர்ஹூம்.க.முகைதீன் பக்கீர் அவர்களுடைய மகனாரும், KM.கமர்தீன்,  மர்ஹூம்.KM.அப்துல் காதர் மர்ஹூம்.KM.பரக்கத் ஆகியோரது சகோதரரும், உதயம் ஜெ.தாஹீர், பாப்புலர் யூசுப் ஆகியோர்களின் மச்சானும், பகுருதீன், அம்ஜத் கான், பிர்தௌஸ், சபியுல் ரஹ்மான் ஆகியோர்களின் தகப்பனாருமாகிய தலைவர் என்று அழைக்கப்படும் K.M.காதர் பாட்சா அவர்கள் இன்று 07/06/2026 ஞாயிற்றுக்கிழமை வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (07/06/2026)  ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments