வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கறம்பக்குடி பேரூராட்சி வேட்பாளர்கள் அதிர்ச்சி


கறம்பக்குடி பேரூராட்சி

கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு மொத்தம் 13,183 வாக்காளர்கள் உள்ளனர். வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏற்கனவே இருந்த வார்டுகளின் நம்பர் மாற்றப்பட்டு உள்ளன. மேலும் வாக்காளர்களின் வார்டுகள் ஏற்கனவே இருந்த பகுதியில் இருந்து வேறு வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதனால் வாக்காளர்கள் குழம்பி போய் உள்ளனர்.

இதேபோல் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் ஓட்டுகள் வெவ்வேறு வார்டுகளின் இணைப்பு பட்டியலில் உள்ளது. இதனால் புதிய வாக்காளர்கள் பலர் தங்கள் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை என்றே கருதி உள்ளனர்.

வேட்பாளர்கள் அதிர்ச்சி

இந்தநிலையில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், தந்தை பெயர், புகைப்படம் போன்றவை சம்பந்தம் இல்லாமலும், முரண்பாடாகவும் இருப்பதால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கறம்பக்குடி பேரூராட்சி 6-வது வார்டில் பெண் வாக்காளர் ஒருவரின் பெயர் கறம்பக்குடி என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோல் 2-வது வார்டில் புகழரசன் என்ற வாக்காளரின் தந்தை பெயர் புதுக்கோட்டை என இடம்பெற்று உள்ளது. 

இதுதவிர பெண் பெயரில் ஆண் புகைப்படமும், நீண்ட வயது வித்தியாசம் என பல்வேறு குளறுபடிகள் நிறைந்ததாக வாக்காளர் பட்டியல் உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 
வாக்காளர் பட்டியலில் விவரங்கள் தவறாக பதிவிடப்பட்டுள்ள வாக்காளர்கள் தாங்கள் ஓட்டுப்போட முடியுமா? என்று சந்தேகம் அடைந்து உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments