புதுக்கோட்டை சின்னப்பா நகரில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பதாகை வைப்புபுதுக்கோட்டை சின்னப்பா நகரில் அடிப்படை வசதி செய்யாததால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் பதாகை வைத்தனர்.

புதுக்கோட்டை சின்னப்பா நகர் கிழக்கு பகுதி நகராட்சி வார்டு எண் 41-ல் உள்ளது. நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் தார்ச்சாலை போடாததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாக்கடை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படவில்லை எனவும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

 இந்த பதாகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதாகையின் அருகே நேற்று காலை அப்பகுதி மக்கள் திரண்டிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments