கோட்டைப்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே ஓடாவிமடம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் காளிமுத்து (வயது 24). பொக் லைன் எந்திர ஆபரேட்டர். 

சம்பவத் தன்று தனது மோட்டார் சைக்கிளில் ஓடாவிமடத்திலிருந்து புத்தாம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். ஆர்.புதுபட் டினம் பிரிவு ரோடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடு மாறி அவர் கீழே விழுந்தார். 

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காளிமுத்து பரிதாபமாக உயிரி ழந்தார். ..

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments