அதிராம்பட்டினம் ஏரி, குளங்களில் குவியும் நீர் காகங்கள்





இனப்பெருக்க காலத்தையொட்டி அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் நீர் காகங்கள் குவிந்து வருகின்றன. 

அலையாத்திக்காடு

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை ஓரத்தில் அலையாத்திக் காடு உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியான இங்கு வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. பெரும்பாலும் இனப்பெருக்கத்துக்காகவே அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. 

இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் முட்டையிட்டு, குஞ்சுகளை பொரித்து, மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு சிறகடித்து பறக்கின்றன. பறவைகளின் இனப்பெருக்க காலம் டிசம்பரில் தொடங்கி ஏப்ரல் வரை நீடிக்கும். 

இனப்பெருக்க காலம்

ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்க வேண்டிய பறவைகளின் இனப்பெருக்க காலம் ஒரு மாதம் தாமதமாக, தற்போது தொடங்கி உள்ளது. இதையொட்டி அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டை சுற்றி உள்ள ஏரி, குளங்களில் நாட்டுப்பறவை இனங்களான நாரை, கொக்கு, நீர் காகம் போன்ற பறவைகள் குவிய தொடங்கி உள்ளதை காண முடிகிறது. 

புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் உள்ள செல்லிக்குறிச்சி ஏரியில் எப்போதும் நீர் நிரம்பி இருக்கும். அங்கு கடந்த சில நாட்களாக  நாரைகளும், நீர் காகங்களும் ஏராளமாக சுற்றித்திரிகின்றன. 

இரை தேடும் பறவைகள்

ஏரியில் நீந்தும் மீன்கள் மற்றும் புழுக்களை பறவைகள் உணவாக உட்கொள்கின்றன. ஏரியை சுற்றி உள்ள நெல் வயல்களையும் பறவைகள் இரைக்காக சுற்றித்திரிகின்றன. மரைக்காகுளம் பகுதியில் மீன்கள் அதிகளவில் இருப்பதால் அங்கு பறவைகள் கூட்டம், கூட்டமாக முகாமிட்டுள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments