ஆலங்குடி அருகேயுள்ள சிட்டங்காட்டில் 600 மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைக்கும் பணி தொடக்கம்


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சிட்டங்காட்டில் குறுங்காடு அமைக்கும் விதமாக சுமாா் 600 மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள சிட்டங்காட்டில் உள்ள குளக்குரையில் குறுங்காடு அமைக்கும் வகையில் ஏராளமான மக்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் 600 மரக்கன்றுகள் நடும் பணியை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசியது:

ஆலங்குடி தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்து குறுங்காடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதில், சிட்டங்காட்டில், சுமாா் ஆயிரம் பேரைக்கொண்டு 5 நிமிடங்களில் 600 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments