கோபாலப்பட்டிணத்தில் சுற்றி திரியும் குரங்கு! பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்!!





கோபாலப்பட்டிணத்தில் குரங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது. குழந்தைகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதுக்கோடடை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் குரங்கு நடமாட்டம் உள்ளது. 03.02.2022 மக்கா தெருவில் காணப்பட்டது.எனவே வெளியில் செல்லக்கூடியவர்கள் மற்றும் வீட்டில் இருக்கக்கூடியவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும், பிள்ளைகளை தேவையின்றி வெளியில் அனுப்பாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கின்றோம். குரங்கு சில வீடுகளில் உள்ள மரத்தில்  பழங்களை தின்று வீசுகிறது.

கடந்த வருடம் 2021ல் கோபாலப்பட்டிணத்தில் 4 பேரை வெறி நாய் கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது. தற்போது விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியமாக உள்ளது. 

குரங்குகளை பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2021 பிப்ரவரி மாதம் தஞ்சையில், வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பிறந்து 8 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளை குரங்குகள் தூக்கிச்சென்றன. இதில் ஒரு குழந்தையை அருகில் உள்ள அகழியில் வீசியதால் அந்த குழந்தை இறந்தது. மற்றொரு குழந்தை காயத்துடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments