ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு




ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் மத்திய-மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளான பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் 15-வது மாநில நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட திட்டப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வீரமங்கலம், குன்னூர், கீழச்சேரி, தொண்டைமானேந்தல், திருப்பெருந்துறை, சிறுமருதூர் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் ஆய்வு மேற்ெகாண்டார். இந்த ஆய்வின்போது உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், வீடு கட்டும் பயனாளிகள் ஆகியோர் உடனிருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments