‘சுகாதாரத்தில் முன்மாதிரி கிராம விருதுகளைப் பெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ புதுக்கோட்டை மாவட்டம் கலெக்டர் தகவல்





புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு பரிசுத்தொகையும், கேடயமும் வழங்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின்கீழ் சுகாதாரம் மற்றும் துப்புரவு தொடர்பான பணிகள் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின்கீழ் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசால், முன்மாதிரி கிராம விருது உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் மூன்று ஊராட்சிகளுக்கு தலா ரூ.15.00 இலட்சம் பரிசுத்தொகையும் கேடயமும், மாவட்ட அளவில் ஒரு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூ.7.50 இலட்சம் பரிசுத்தொகையும் கேடயமும், வழங்கப்படவுள்ளது.

அதன்படி திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலை நிறுத்துதல், திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை உரிய முறையில் மறு சுழற்சி செய்தல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, வீட்டுக்கழிவு மேலாண்மை, கிராம ஊராட்சியின் அழகிய தோற்றம் ஆகிய சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும்.

இதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளிலும் சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வட்டாரத்திற்கு 2 ஊராட்சிகள் வீதம் மொத்தம் 26 முன்மாதிரி நிறைசெறிவு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு இவ்வூராட்சிகளில் சமூக வரைபடம், மூன்று கட்ட கழிவு தணிக்கை, திடக்கழிவு மேலாண்மை கூடங்கள் மறுசீரமைப்பு, சாம்பல் நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை, தூய தெருக்கள் பராமரிப்பு ஆகிய பல்வேறுகட்ட பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றன.

எனவே, இந்த பணிகளில் உள்ளாட்சி பிரதிநிதிக அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செயல்பட்டு மாநிலத்தில் முதற்பரிசினை பெறத்தக்க வகையில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதுடன் பொதுமக்கள் தங்களின் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் குப்பைகள் சேரா வண்ணம் பராமரிக்கவும், சுகாதார பழக்க வழக்கங்களை மேற்கொள்ளவும், அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments