மணமேல்குடி ஒன்றியத்தில் 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட' கற்போருக்கு எழுத்தறிவுத் தேர்வு!



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின்' கீழ் இயங்கும் கற்றல் மையங்களில் பயிலும் கற்போருக்கான எழுத்தறிவுத் தேர்வு நடைபெற்றது.

24 மையங்களில் 480 கற்போர்கள் தேர்வு எழுதினர்
மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 24 மையங்களில் இந்த எழுத்தறிவுத் தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 480 கற்போர்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

வாசித்தல், எழுதுதல், எண்ணறிதல் போன்ற அனைத்துத் திறன்களையும் சோதிக்கும் வகையில் 150 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு
தேர்வு நிகழ்வுகளை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் (BEO) மதிப்புக்குரிய திரு. செழியன் மற்றும் திருமதி. அமுதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) திருமதி. சிவயோகம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு. சசிகுமார், திரு. பன்னீர்செல்வம் ஆகியோரும் தேர்வுகளைக் கண்காணித்தனர்.

கண்காணிப்பு
ஒவ்வொரு கற்றல் மையத்திலும் அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, தேர்வுகளைச் சிறப்பாக நடத்தி முடித்தனர். கற்போர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் தேர்வை எதிர்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments