கோபாலப்பட்டிணத்தில் இரண்டு மாத காலமாக சீரமைக்கப்பட்ட காட்டுக்குளம்,GPM சீரமைப்பு குழுவிற்கு மக்கள் பாராட்டு
கோபாலப்பட்டிணத்தில் இரண்டு மாத காலமாக சீரமைக்கப்பட்ட காட்டுக்குளம்,GPM சீரமைப்பு குழுவிற்கு மக்கள் பாராட்டினார்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM சீரமைப்பு குழு தொடர்ந்து ஐந்து வருடத்திற்கு மேல் கோபாலபட்டினத்தின் சில அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்துகொண்டு இருக்கிறது .  காட்டுகுளம் பகுதியில் காடுகள் போல் குவிந்திருந்த வேலிக்கருவைகளைவேரோடு புடுங்கி சீர் செய்யப்பட்டதோடு அந்த பகுதி முழுவதும் சீர் செய்யப்பட்டு சுத்தமாக காட்சியளிக்கிறது.


இச்சேவையை மகத்தான பணி என்று மக்கள் GPM சீரமைப்பு குழுவை பாராட்டி செல்கின்றனர்.
இதற்காக  ₹65,000 ரூபாய் செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


 இதற்கான பொருளாதாரத்தை வழங்கிய , இன்னும் வழங்க இருக்கும் , அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.

மக்களுக்கு பயன்பெறும் வகையில் நல்ல திட்டங்களை செய்து வரும் GPM சீரமைப்பு குழுவை GPM மீடியா மனமார வாழ்த்துகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments