ஜெகதாப்பட்டினம் அருகே நகை மற்றும் பணம் கொள்ளை
ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள செல்லனேந்தல் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மகன் முருகன் (வயது 28). இவர் ஆந்திராவில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது முருகன் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் குடும்பத்துடன் தூங்க சென்றுள்ளனர். பின்னர் காலை எழுந்து வந்து வீட்டை திறந்து பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், ஜெகதாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments