புதுக்கோட்டையில் அனுமதி பெறாமல் இயங்கும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாகி ஹிமாயூன்கபீர் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்து நிலத்தடி நீர் மட்டத்தை அடியோடு வறண்டு போக வைக்கும் கல்குவாரிகளை இழுத்து மூட வேண்டு்ம் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments