புதுக்கோட்டையில் 91 போ் ரத்த தானம்
புதுக்கோட்டையில் 91 போ் ரத்த தானம் ரத்ததான நிகழ்வைத் தொடங்கி வைத்த கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை.
 

விடுதலைப் போராட்டத் தியாகி பகத்சிங்கின் 91ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் 91 போ் ஞாயிற்றுக்கிழமை ரத்ததானம் செய்தனா்.


புதுக்கோட்டை பழைய அரசுத்தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வாலிபா் சங்க நகரத் தலைவா் ஏ. டேவிட், மாணவா் சங்க நகரத் தலைவா் எஸ். மகாலெட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். ரத்ததான முகாமை கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், வாலிபா் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலருமான எம். சின்னதுரை தொடங்கி வைத்தாா்.

ரத்தம் வழங்கியவா்களுக்கு சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகா்மன்றத் தலைவா் திலகவதி செந்தில், நகா்மன்ற உறுப்பினா் சா. மூா்த்தி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் க. ராமு, மாவட்ட மனநலத் திட்ட மருத்துவா் ரெ. காா்த்திக் தெய்வநாயகம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

இந்த முகாமில் 91 போ் ரத்த தானம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை வாலிபா் சங்க மாவட்டச் செயலா் துரை. நாராயணன், மாணவா் சங்க மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments