தொண்டி தனி தாலுகாவாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியை தனி தாலுகாவாக ஆக்கும் அறிவிப்பு வெளியாகுமா? என்று அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் பகுதி யாகும். தொண்டியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் காரங்காடு, முள்ளிமுனை உள்பட எஸ்பி பட்டிணம் வரையில் கடற்கரை பகுதியாகும். இப்பகுதி மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவறு உள்ளிட்ட அனைத்து அரசு பணிக்கும் நீண்ட தூரமுள்ள திருவாடானைக்கே செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஆண்டு திருவாடானை தாலுகாவில்
இருந்த ஆர்எஸ்.மங்கலம் பகுதியை தனி தாலுகா வாக அறிவித்தது அப்ப குதி மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது. அதே போல் தொண்டியையும் தனி தாலுகாவாக அறிவித்தால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்

இதுகுறித்து தொண்டி சாதிக் பாட்சா கூறுகை யில், 

'எஸ்பி.பட்டிணத்தி லிருந்து திருவாடானை செல்ல வேண்டும் என்றால் தொண்டி வழியாக சுமார் 30 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதேபோல் முள்ளிமுனை எம்ஆர். பட்டிணம் உள்ளிட்ட கடைகோடி கிராமங்க ளிலிருந்து அலுவல் பணியின் காரணமாக மக்கள் செல்வதில் கடும் சிரமப்படுகின்றனர். எனவே தற்போது பேருராட்சியாக உள்ள தொண்டியை தனி தாலுகாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments