புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிவெற்றி பெற்ற அணிகளுக்கு சூப்பிரண்டு பரிசு வழங்கினார்

 
போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் போலீசார், பொதுமக்கள் இடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் கைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை டவுன், கணேஷ்நகர், திருக்கோகர்ணம், கந்தர்வகோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் வழங்கினார். 

அப்போது அவர் பேசுகையில், ‘‘போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும்விதமாகவும், பொதுமக்களிடையே நல்லுறவை பேணும்விதமாகவும் இதுபோன்ற போட்டிகள் நடைபெறுகிறது. தற்போதைய சிறுவர்கள் செல்போனில் கேம்கள், லேப்டாப்களில் மூழ்கிவிடுகின்றனர். வெளிப்புறங்களில் உள்ள விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. மைதானம் அல்லது வெளிப்புற விளையாட்டுகளை தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்’’ என்றார். 

நிகழ்ச்சியில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments