மீமிசலில் சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்.. இருவர் படுகாயம்...
மீமிசலில் சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை ICICI வங்கி அருகே வல்லம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிர்பாராவிதமாக எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments