கடந்த 16 ஆம் தேதி ஏப்ரல் சனிக்கிழமை அன்று இந்தியன் சோஷியல் ஃபோரம் பஹ்ரைன் சார்பாக மாபெரும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பஹ்ரைன் தலைநகரம் மனாமாவில் உள்ள இந்தியன் கிளப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக அன்னை தமிழின் ஆதி நூலான திருக்குறளின் தமிழக அரசின் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் சீரிய முயற்சியில் பேராசிரியர் ஜாஹிர் உசேன் அவர்களின் அயராத உழைப்பால் உருவான அரபு மொழி பெயர்ப்பு மிக விமர்சையாக இந்தியன் சோஷியல் ஃபோரம் பஹ்ரைன் அமைப்பின் தமிழ் பிரிவின் சார்பாக பஹ்ரைனில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.
அரங்கம் நிறைந்த இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு யூசுப் யாகூப் லாரி - பஹ்ரைன் தலைநகரான மனாமா மாநில ஆளுநர் அலுவலக நிர்வாக அதிகாரி மற்றும் திரு ரவிசங்கர் ஷுக்லா இந்தியத் தூதரக செயலாளர் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தேசிய தலைவர் திரு அலி அக்பர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் வட இந்திய பொறுப்பாளர் திரு சித்தீக் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் பஹ்ரைன் வாழ் வெளிநாட்டு இந்திய மக்களுக்காக சிறப்பாக செயலாற்றி வரும் இந்தியன் சோசியல் போரத்திற்கு பாராட்டுக்களை திரு யூசுப் யாகூப் லாரி அவர்கள் தெரிவித்தார்.
பின்னர் பேசிய இந்திய தூதரக செயலாளர் திரு ரவிசங்கர் ஷுக்லா அவர்கள் பக்ரைனில் வாழும் அனைத்து சமூகத்திற்காக இந்தியன் சோஷியல் ஃபோரம் செய்து ஒரு பணிகளை பாராட்டினார் மென்மேலும் பணிகளை தொடர தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மிக சிறப்பம்சமாக திருக்குறள் அரபி மொழி பெயர்ப்பின் முதல் பிரதியை இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தமிழ் மாநில தலைவர் முஹம்மது நவாஸ் அவர்கள் வழங்கிட நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு யூசுப் யாகூப் லாரி பஹ்ரைன் அரசாங்க அதிகாரி மற்றும் திரு ரவிசங்கர் ஷுக்லா அவர்களும் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திரு அப்துல் கரீம் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தேசிய துணைத் தலைவர் அவர்களும், திரு அப்துல் கையூம் மற்றும் திரு அப்துல் கபூர் பஹ்ரைன் ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள்மற்றும் திரு அகமது இப்ராஹிம் சமூக சேவகர் மற்றும் எழுத்தாளர் அவர்களும், திரு சானிப் பவுல் இந்தியன் கிளப் செயலாளர் அவர்களும், ஜிபி சாமி பாரதி தமிழ் சங்கம் தலைவர் அவர்களும், திரு அத்தாவுல்லாஹ் இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பத்தனர்.
ஜாதி மதம் பேதமின்றி ஒற்றுமை கடல் கடந்தும் இந்நிகழ்வின் வாயிலாக எதிரொலித்தது என்றால் அது மிகையல்ல.....
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.