மேற்பனைக்காட்டில் மஜக உண்மை அறியும் குழு ஆய்வு 


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வட்டம் மேற்பனைக்காடு கிராமத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின்  உண்மை அறியும் குழு ஆய்வு செய்ததது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வட்டம் மேற்பனைக்காடு கிராமத்தில் செயல்பட்டு வரும் சமூகநல அறக்கட்டளை கட்டிடம் குறித்து கடந்த 4ம் தேதி  பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா விசம கருத்துக்களை பேசினார்.

பரபரப்பான இச்சூழ்நிலையில் சமூக நல்லிணக்கம் கருதி மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் தமிமுன் அன்சாரி உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில்  மேற்பனைக்காடு கிராமத்தில் மாநில துணை பொது செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் தலைமையில் உண்மை அறியும் குழு ஆய்வு செய்தது. மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், கலாச்சாரப் பேரவை மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது, மாவட்ட நிர்வாகிகள் சம்சுதீன் ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேற்பனைக்காடு ஜமாத் நிர்வாகிகள் முகமது இசாக், பஷீர் அஹமது, முஹம்மது மூசா உள்ளிட்டோர் 
ஊர் மற்றும் ஜமாத் நிலைப்பாடுகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர்.

அப்போது பேசிய மஜக மாநில துணை பொது செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மேற்பனைக்காடு கிராமத்தில் ஒற்றுமையோடு வாழ்ந்து வரும் அனைத்து சமூக மக்களுக்கு மத்தியில் விசக் கருத்துகளை பேசிய எச் ராஜா மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது அவதூறு கருத்துக்கள் பேசிய எச் ராஜா வை வன்மையாக கண்டிக்கிறோம். மேற்பனைக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பயன்தரும் வகையில் பல சேவைகளை செய்துவரும் சம்சல்பிவி பொதுநல அறக்கட்டளை கட்டிடம் மற்றும் அதனுடைய சேவைகள் குறித்து குரோதமான வார்த்தைகளை பேசிய எச் ராஜா தன் கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும். மேற்பனைக்காடு ஜமாத் நிர்வாகத்தின் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி எப்போதும் துணை நிற்கும் எனவும் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments