புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் மோட்டார் சைக்கிள்-கார்கள் மோதல்; 7 பேர் காயம்

காரைக்குடி கோட்டையூர் டெலிபோன் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40). இவரது மனைவி சங்கீதா (34), மகள் நிகீதா (9). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் காரைக்குடியில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தனர். இவரது முன்னால் பெருமாநாடு பகுதியை சேர்ந்த சுப்பையா (52), அவரது உறவினர் மலையாண்டி மனைவி செல்வி (43) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் வந்தபோது, திடீரென சுப்பையா மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ்குமார் ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்த வழியாக வந்த மணிவேல் என்பவர் ஓட்டி வந்த காரும், எதிர்பாராதவிதமாக சுரேஷ்குமாரின் கார் மீது மோதியது. இதில் சுரேஷ்குமார், சங்கீதா, நிகீதா, சுப்பையா, செல்வி மற்றும் மணிவேல், அவரது காரில் வந்த சுகன்யா ஆகிய 7 பேரும் காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments