ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் அரசின் இலவச வீடு கட்டபடாமலே ரூ . 7 கோடி முறைகேடு... 25 அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்...





புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வீடு கட்டாமலேயே கட்டியதாக ரூ.7 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 2016 முதல் 2020 வரை அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் 480 வீடுகள் கட்டியதாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 480 வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு ரூ.7 கோடி வரை பணம் தந்து மோசடி செய்ததாக 25 அரசு ஊழியர்கள் மீது புகார் எழுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புகார் தொடர்பாக அப்போதைய ஆவுடையார்கோவில் ஒன்றிய ஆணையர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உள்பட 25 அரசு ஊழியர்களுக்கு, அம்மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

மேலும், முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் இதனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் தகவல் கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments