கீழக்கரையில் குழந்தைகளை தாக்கும் புதுவகை வைரஸ் காய்ச்சல்






கீழக்கரையில் குழந்தைகளை தாக்கும் புதுவகை வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தற்போது உள்ள வெப்பநிலை காரணமாக 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடல் வலி காய்ச்சல், தொண்டை, கை, கால் போன்ற இடங்களில் அம்மை நோய் போன்ற அறிகுறி ஏற்பட்டு குழந்தைகள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் சிலர் கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சலாக இருக்குமோ என்று கூறுகின்றனர். இதனால் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இது குறித்து வட்டார மருத்துவர் செய்யது ராசிக்தீன், மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் ஆகியோர் கூறியதாவது:- 

இந்த நோய்க்கு காக்ஸ்சாக்கி என்று பெயர்.  கேரளாவில் பரவிய தக்காளி காய்ச்சலுக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று கூறினர்.மேலும் வருடம் தோறும் இது போன்ற காய்ச்சல்கள் வருவது வழக்கம். கடந்த வருடம் இந்தக் காய்ச்சல் வந்த குழந்தைகளுக்கு மீண்டும் வராது. இந்த காய்ச்சல் வந்தால் குறைந்தது 7 நாட்கள் வரை இருக்கும். காய்ச்சல் வந்த குழந்தைகள் மூலம் மற்ற குழந்தைகளுக்கும் பரவும். முடிந்த வரை குழந்தைகளை வெளியில் விடாமல் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும். 

தொண்டையில் வாய்ப்புண் ஏற்படுவதால் குழந்தைகளால் சாப்பிட இயலாது அவர்களுக்கு நீர் ஆகாரங்களை மட்டும் கொடுக்கவும். குழந்தைகளுக்கு கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆயில் மூலம் கைகளை அடிக்கடி கழுவிக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments