தனியார் பள்ளிகளில் இலவச கல்வி... கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு






RTE இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய இருந்த நிலையில்,  25ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்புசாமி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் நலிந்த ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் சேரக்கூடிய குழந்தைகளுக்கு LKG முதல்  8ம் வகுப்பு வரை இலவசம்.

அதன்படி வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கான ஆன்லைன் பதிவு நடந்து வருகிறது. மொத்தம் உள்ள ஒரு லட்சத்தி முப்பதாயிரம் இடங்களுக்கு , நேற்று வரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர் . விண்ணப்பம் செய்வதற்கு நாளை கடைசி நாள் நாளை என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , வரும் 25-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்த பிறகு கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களை நிரபந்திப்பதும் நோய்த்தொற்று காலத்தில் அரசு பள்ளிகளுக்கு ஏராளமான மாணவர்கள் சென்றதும் இதற்கு காரணமாக முன்வைக்கப்படுகிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments