GPM மீடியா செய்தி ஊடகத்தின் அட்மின் டீம் A. வாசிம் அக்ரம் திருமண விழா!!





GPM மீடியா செய்தி ஊடகத்தின் அட்மின் டீம்மின் ஒருவரான A. வாசிம் அக்ரம் அவர்களின் திருமணம் இன்று (05-05-2022) வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக இத்திருமண விழாவை சிறப்பிக்க வருகை தந்தோர்களை நண்பர்கள் புடைசூழ குடும்பத்தினர்கள் வரவேற்று அவர்களை நன்கு உபசரித்தனர்.

பின்பு காலை 12 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை கோபாலப்பட்டிணத்தில் உள்ள MKR ராசி திருமண மாஹாலில் GPM மீடியா அட்மின் டீம் A. வாசிம் அக்ரம் – M. பௌமிதா ஆகியோரின் திருமண ஒப்பந்தம் என்றழைக்கப்படும் நிக்காஹ் வைபவம் நடைபெற்றது.
 
நிக்காஹ் முடிந்த பின்னர் வாசிம் அக்ரம்-க்கு குடும்ப உறவுகளும், நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
இரு'கை'கள் இணையும் வேளையில்
இருக்கைகள் நிறையட்டும் பாசங்கள் பகிரட்டும்
இன்பங்கள்  பொங்கட்டும் 
இறைவனை போற்றி என்றும் இறைவழி செல்லட்டும் என்று துஆக்களோடு..
இன்று திருமணம் எனும் தித்திப்பான பந்தத்தில் இணைந்திருக்கும் A. வாசிம் அக்ரம் – M.பௌமிதா மணமக்களை “GPM மீடியா” செய்தி ஊடகம் மனமார வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறது.

நீங்களும் இம் மணமக்களை வாழ்த்தலாமே...












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments