கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் ரமலான் மாதம் முன்னிட்டு பெண்களுக்கான குர்ஆன் கேள்வி பதில் போட்டியின் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியீடு 

கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பெண்களுக்கான குர்ஆன் கேள்வி பதில்  நிகழ்ச்சியின் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள
கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு குர்ஆன் கேள்வி பதில் போட்டிக்கான கேள்விகள் வெளியிடப்பட்டு இருந்தது இந்த கேள்வி-பதில் போட்டியில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று அறிவித்து இருந்தார்கள்.
 
நேற்று முன்தினம்  03.05.2022 செவ்வாய அன்று மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு  கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பரிசுகளை வெற்றி பெற்றவர்களுக்கு ஜமாத்தர்கள் மற்றும் மதரஸா  பெண்கள் நிர்வாகிகள் 
வழங்கினார்கள் .
இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள்,ஊர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் மக்களும்  கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் ஆர்வத்துடன்
ஏராளமான போட்டியாளர்கள்  கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை   சொந்தங்கள் ஏற்பாடு செய்தனர்.

பரிசுகள் பெற்றர்கள் விபரம்

முதல் பரிசு

உம்மு குல்தும்
W/o பஷீர் அஹமது SRM

வாஷிங் மிஷின்
ஹாட் பாக்ஸ்
சில்வர் காயின் 
தர்ஜூமா
இஸ்லாமிய அடிப்படை கொள்கை குறித்தான கித்தாப்
சான்றிதழ்

இரண்டாம் பரிசு/2

ஜான்ஸ் பீவி
W/o ஜெய்னுல் ஆப்தீன்

ஹதிஜா பேகம்
த/பெ அமீர் சுல்தான்

ஏர் கூலர்
ஹாட்பாக்ஸ்
சில்வர் காயின்
தர்ஜூமா
இஸ்லாமிய அடிப்படை கொள்கை குறித்தான கித்தாப்
சான்றிதழ்

மூன்றாம் பரிசு

ஷர்மிளா பானு
க/பெ சேக் அப்துல்லா

டேபுள் பேன்
ஹாட் பாக்ஸ்
சில்வர் காயின்
தர்ஜூமா
இஸ்லாமிய அடிப்படை கொள்கை குறித்தான கித்தாப்
சான்றிதழ்

டாப் 3 பரிசுகள் 4 நபர்களுக்கு வழங்கப்பட்டது

மேலும் நிகழ்சியில் பங்கேற்ற அனைத்து நபர்களுக்கு தர்ஜீமா, இஸ்லாமிய அடிப்படை கொள்கை குறித்தான கித்தாப் மற்றும் சான்றிதழ் ஆகியவை
சிறப்பு பரிசாக வழங்கபட்டது.

இதில் பரிசு பெற்றவர்கள் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றியையும் மேலும் பல மார்க்க சம்பந்தமான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்

மேலும் கோபாலப்பட்டிணத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தமிழ் தர்ஜீமா இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் அடிப்படையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசாக  தமிழ் தர்ஜீமா வழங்கப்பட்டது. எனவே அனைவரும்  தமிழ் தர்ஜீமாவை படித்து பயன்பெருமாறு கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதற்காக பொருளாதார உதவிகள் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த ஜமாத்தார்கள், மதரஸா நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் மற்றும் உதவும் கரங்கள்  சொந்தங்கள் அனைவருக்கும் நன்றியையும் சலாத்தினையும் தெரிவித்து கொள்கிறோம்.

குறிப்பு: குர்ஆன் கேள்வி பதில் போட்டிக்கான விடைகள் விரைவில் வெளியிடப்படும்

அன்புடன்

என்றும் உதவும் கரங்கள்
சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை
கோபாலப்பட்டிணம்
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments