கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் ஃபித்ரா வினியோகம்.!






கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் 2022 நோன்பு பெருநாளை முன்னிட்டு ஃபித்ரா பொருட்கள் மற்றும் தொகை (02-05-2022) அன்று விநியோகம் செய்யப்பட்டது...

105 குடும்பங்களுக்கு மொத்தம் *31,995* ரூபாய்  மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது மேலும் 
ரொக்கமாக *5775* ரூபாய் 15 குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது...

இந்நிகழ்வில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் பித்ரா தொகை மற்றும் பொருட்கள் வழங்கினார்கள். 

ஃபித்ரா யார் யார் மீது கடமை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

صحيح البخاري

1503 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»

அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1503

தகவல்: 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 
கோபாலபட்டினம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments