கைக்கெடிகாரம் ஆன்லைனில் ஆர்டர் செய்த புதுக்கோட்டை வாலிபருக்கு அதிர்ச்சி




கைக்கெடிகாரம் ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு வெறும் கூடு மட்டும் தான் பார்சலில் வந்ததால் புதுக்கோட்டை வாலிபர் அதிர்ச்சியடைந்தார்.

ஆன்லைன் விளம்பரம்

புதுக்கோட்டையை சேர்ந்த தீபக்ராஜ் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் விளம்பரத்தில் கைக்கெடிகாரம் ஒன்று பார்த்துள்ளார். அதில் ரூ.1,500-க்கு அந்த கைக்கெடிகாரத்தை ஆர்டர் செய்துள்ளார். அதனை அவரது முகவரிக்கு கூரியர் மூலம் பார்சல் டெலிவரி ஆனது. பார்சலை பெற்றதும் பணத்தை கூரியர் நிறுவன ஊழியரிடம் வழங்கினார்.

இந்த நிலையில் பார்சலை பிரித்து பார்த்த போது கைக்கெடிகாரத்திற்கு பதிலாக வெறும் கூடு மட்டும் தான் இருந்துள்ளது. கைக்கெடிகாரத்தின் பிரதான பகுதியான நேரத்தை காட்டும் இடம் வெறுமையாக இருந்தது.

மோசடி நிறுவனம்

இதையடுத்து கூரியர் நிறுவனத்திடம் சென்று அவர் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது பார்சல் டெலிவரி செய்வது மட்டும் தான் நாங்கள். பொருள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளவும் என கூரியர் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆன்லைனில் ஆர்டர் செய்த இணையதளத்தின் முகவரியை தொடர்பு கொண்ட போது அந்த செல்போன் எண் 'சுவிட்ச் ஆப்' என வந்துள்ளது. அந்த நிறுவனம் மோசடி நிறுவனம் என தெரியவந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வாலிபர் போலீசில் எதுவும் புகார் கொடுக்கவில்லை. ஆன்லைனில் வர்த்தகம், வேலை தொடர்பான மோசடி நிறுவனங்களிடம் பொதுமக்கள் ஏமாறாமல் உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments