காவல் உதவி’ செயலியில் வியாபாரிகள் புகார் அளிக்க புதிய வசதி டி.ஜி.பி. அறிவிப்பு
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சியில் கடந்த மாதம் 5-ந்தேதி நடந்த வணிகர்கள் சங்க மாநாட்டில், ‘‘வணிகர்கள் தங்கள் புகார்களை காவல்துறையில் எளிதில் அளிக்க காவல் உதவி செயலியில் ‘வணிகர் உதவி வசதி’ என்று ஒரு புதிய வசதி ஏற்படுத்தப்படும்’’, என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதனை ஏற்று, வியாபாரிகள் காவல்துறையின் அவசர உதவியை நாட ‘வணிகர் உதவி’ (Help for Merchants) என்ற வசதி ‘காவல் உதவி’ செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வியாபாரிகள் ரவுடிகளால் ஏற்படும் இடையூறுகள், மாமூல், ரவுடிகளால் தாக்குதல், கடை-குடோனில் திருட்டு, கந்து வட்டி, கடையில் வாக்குவாதம், சண்டை மற்றும் இதர புகார்கள் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

எனவே வியாபாரிகள் அனைவரும் காவல் உதவி செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments