அரசநகரிப்பட்டினம் பகுதியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள அரசநகரிப்பட்டினம் பகுதியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயம் பெரியமாடு மற்றும் சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு பரிசு தொகையும், சுழல் கோப்பையும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments