வேல்வரை கிராமத்தில் ஆற்று மணல் அள்ளிய 2 பேர் தப்பி ஓட்டம்; மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்        
        புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள வேல்வரை கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக ஆற்று மணலை அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மீமிசல் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிள்களில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் ஆற்றுமணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments