பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவுஇன்று (ஜூன் 20) முதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.50 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆக.16 முதல்அக்.14-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவுஇன்று (ஜூன் 20) முதல் தொடங்குகிறது. மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வழியாக ஜூலை 19-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். தகுதிபெற்ற மாணவர்களின் சமவாய்ப்பு எண் ஜூலை 22-ல் வெளியாகும்.

இதையடுத்து, தரவரிசைப் பட்டியல் ஆக.8-ம் தேதி வெளியிடப்படும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் ஆக.9 முதல் 14-ம் தேதிவரை சேவை மையம் மூலம் நிவர்த்தி செய்யப்படும். அதன்பின் கலந்தாய்வு ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கி நடைபெறும்.

நடப்பு ஆண்டு மாணவர்கள் வசதிக்காக அவர்கள் படித்த பள்ளிகள் மூலமே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 110 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இலவச உதவி மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments