இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அறந்தாங்கி பேருந்து நிலையம் விரிவுப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்






அறந்தாங்கி பேருந்து நிலையம் குறுகிய பரப்ப ளவே கொண்டுள்ளதால், இடநெருக்கடி ஏற்படு கிறது. எனவே நகரப் பேருந்துகளை தனியாக பிரித்து பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி பேரூ ராட்சியாக இருந்தபோது கடந்த 1968ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டு மானப் பணிகள் நிறைவு பெற்று 1971ம் ஆண்டு டிசம் பர் மாதம் 28ம் தேதி அப் போதைய திமுக அமைச் சர் அன்பில்தர்மலிங்கம் அறந்தாங்கியில் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலை யத்தை திறந்துவைத்தார். அறந்தாங்கி கலைஞர் கரு ணாநிதி பேருந்து நிலை யம் திறக்கப்பட்டபோது, இந்த பேருந்து நிலையத் தில் இருந்து சுமார் 10 முதல் 30 பேருந்துகள் வரையே சென்று வந்தன. அப்போது அறந்தாங்கி யில் இருந்து அதிக பட்ச தூரமாக காரைக்குடி, புதுக்கோட்டை, பட்டுக் கோட்டை, தொண்டி வரையே பேருந்துகள் இயக்கப்பட்டன.

பின்னர் அறந்தாங்கி நக ராட்சியாக தரம் உயர்த்தப் பட்ட பின்பு இந்த பேருந்து நிலையத்தில் தரைத் தளம் மேம்பாடு, மேற்கூரை விஸ் தரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
மேலும் அறந்தாங்கியில் இருந்து மதுரை,நாகர்கோவில், சென்னை,கோவை, குமுளி, மேட் டுப்பாளையம், திருப்பூர், சிதம்பரம், வேளாங்கண்ணி, திருச்செந்தூர், திருப்பதி, ஈரோடு பல நீண்டதூர ஊர்களுக்கும், பல குக்கிராமங்களுக்கும் புதிதாக வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. 

இன்று பல புதிய வழித்தடங்களில் ஏராள மான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போது இருந்த பேருந்து நிலையமே இன்றும் விரிவு படுத்தப்படாமல் இயங்கி வருகிறது.

காலை மற்றும் இரவு நேரங்களில் அறந்தாங்கி பேருந்து நிலையத்திற் குள் பயணிகள் நடந்து வருவதற்கே சிரமப்படும் வகையில் பேருந்து நிலையம் முழுவதும் பேருந்து கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் நடந்து செல்லக் கூட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த நேரத்தில் பஸ்கள் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே செல்லவே 10 முதல் 20 நிமிடங்கள் ஆகின்றன.

நகராட்சி நிர்வாகத் திற்கு முக்கிய வருவாயாக பேருந்து நிலைய வாகன வசூல், கழிப்பறை, இருசக்கர நிறுத்துமிட வாடகை, பேருந்து நிலைய கடைகளின் வாடகை உள்ளது. 

எனவே அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் ஏற் படும் இடநெருக்கடியை குறைக்க நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தின் தென்புறம் உள்ள கழிப்பறைகளை இடித்துவிட்டு பேருந்து நிலையத்தை விரிவு படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் பேருந்து நிலையம் அருகே உள்ள சத்திரக்குளத்தை தூர்த்துவிட்டு அப்பகுதியில் நகரப்பேருந்துகளுக்கு மட்டும் தனியாக பேருந்து நிலையத்தை அமைக்கலாம். 

இவ்வாறு செய்வதால், அறந்தாங்கி கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியை தவிர்க்கலாம் 

அறந்தாங்கி நகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் அறந்தாங்கி கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் மட்டும் விரிவுபடுத் தப்படாமல் குருவிக்கூடு போல உள்ளது. நகரின் வளர்ச்சியின் அடையாளமே பேருந்து நிலையம் தான். புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண் டாவது பெரியநகரமான அறந்தாங்கியில் விரிவுப டுத்தப்படாமல் இருப் பது வேதனைக்குரியதாக விரிவு படுத்த வேண்டும். உள்ளது. எனவே தமிழக அரசு அறந்தாங்கி கலை ஞர்கருணாநிதி பேருந்து நிலையத்தை விரிவுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்களும், நகர மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: தினகரன் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments