அறந்தாங்கியில் தேங்காய் விலையை விலையை உயர்த்தக்கோரி தென்னை விவசாயிகள் தேங்காயை உடைத்து போராட்டம்




அறந்தாங்கியில் தேங்காய் விலையை உயர்த்தக்கோரி தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், தபால் நிலையம் அருகே தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மத்திய, மாநில அரசு மட்டை நீக்கிய தேங்காய் கிலோ ரூ.50-க்கும், கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்திட ஆணை வழங்கிட வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும். அறந்தாங்கியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்திட வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தின் மானியம் மற்றும் திட்டங்களை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்திட வேண்டும். தென்னையில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்திட விவசாயிகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயம் சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments