வட்டார அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி 2,045 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, மணமேல்குடி, அரிமளம், திருமயம், குன்றாண்டார் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 2,045 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 117 மாணவர்கள், 117 மாணவிகள் என மொத்தம் 234 மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியினை மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.எம்.குமரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ், பள்ளி துணை ஆய்வாளர் குருமாரிமுத்து ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments