புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர் சங்கம் சார்பில் ‘ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
இதனைதொடர்ந்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு செல்கிற இயக்கம் இல்லை. ‘ஆசிரியர்களின் மனசு’ என்ற பெட்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பணி பாதுகாப்பு சட்டம், பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் aasiriyar manasu@gmail.com, aasiriyar kaludananbil@gmail.com என்ற இ.மெயில் முகவரியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.