புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான 16 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் போலீசார் நடவடிக்கை





புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான 16 பேரின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

போதைப்பொருட்கள்

தமிழகத்தில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலா ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலா 7 போலீசார் கொண்ட இந்த தனிப்படையினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வங்கி கணக்குகள் முடக்கம்

இந்த நிலையில் கஞ்சா விற்பனை வழக்கில் கைதாகும் நபர்களின் சொத்துகளை முடக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைதான 16 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் மொத்த வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 19 ஆகும். தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் ஆங்காங்கே கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments