வெறும் ₹180 இல் அறந்தாங்கி - எர்ணாகுளம் (கொச்சி) இடையே வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லலாம்



 


செங்கோட்டை - புனலூர் ரயில் பாதையில் இருக்கும் மலைகள் குகைகள் அழகை ரசித்து கொண்டு பயணிக்கலாம்

வண்டி எண்- 06036 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்)






முக்கிய ரயில்கள் நிலையம் அட்டவணைகள்

அறந்தாங்கி-   இரவு 10.44 மணிக்கு புறப்பட்டு 

காரைக்குடி சந்திப்பு - இரவு 23.25

மானாமதுரை சந்திப்பு - அதிகாலை 01.40 

விருதுநகர் சந்திப்பு  - அதிகாலை 02.00

தென்காசி சந்திப்பு - அதிகாலை ‌03.52

செங்கோட்டை - அதிகாலை 04.20

புனலூர் - காலை 06.55

கொல்லம் சந்திப்பு  - காலை 08.30
 
எர்ணாகுளம் - மதியம் 12:15 மணிக்கு செல்லும்



 
அறந்தாங்கி - எர்ணாகுளம் கட்டண விவரம் 

* முன்பதிவில்லா(Unreserved) டிக்கெட் - ₹180

* படுக்கை வசதி (Sleeper) டிக்கெட் -₹410

* 3 அடுக்கு ஏசி (AC) -
டிக்கெட் - ₹1130

* 2 அடுக்கு ஏசி (AC) - டிக்கெட் - ₹1585

இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை பகல் 12.35 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30. மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

மேலும் இந்த  ரயில்காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை,
விருதுநகர், சிவகாசி,  ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை ,தென்மலை, புணலூர் ,கொட்டாரகர ,குந்தரா,கொல்லம் சாஸ்தன்கோட்டா,
கருநாகப்பள்ளி ,காயங்குளம், மவெலிகரா , செங்கனூர் ,திர்வல்லா , செங்கனாசேரி கோட்டையம்‌ ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

குறிப்பு : அறந்தாங்கி வழியாக செல்லும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது.. விரைவில் வாரம் இருமுறை அதன் பிறகு தினசரியாக இயங்க வாய்ப்பு உள்ளது.

மேலும் அறந்தாங்கியில் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் செல்லலாம். திரும்ப எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி
அறந்தாங்கி வருவதற்கு சனிக்கிழமை தான் ரயில் .

அடுத்த சாய்ஸ் (எர்ணாகுளம் - காரைக்கால் ரயில்)

அறந்தாங்கியில் இருந்து எர்ணாகுளம் (கொச்சி) சென்று ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் சுற்றி பார்த்த பின்னர் அங்கிருந்து தினசரி இரவு 10.30 மணிக்கு கிளம்பும் எர்ணாகுளம் - காரைக்கால் டீ கார்டன் விரைவு இரயில் பயணம் மேற்க்கொண்டு மறுநாள் காலை 07:55 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும்

திருச்சிராப்பள்ளியில் இருந்து அறந்தாங்கிக்கு பேருந்து மூலம் பயணம் செய்து அறந்தாங்கியை வந்தடையளாம்.

இந்த ரயில் மூலம்  அறந்தாங்கியில் இருந்து எளிதில் செல்லக்கூடிய முக்கிய இடங்கள் & சுற்றுலா தலங்கள்: 

குற்றாலம் :

குற்றாலம் சொல்வோர் தென்காசி ரயில் நிலையத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் குற்றாலம் உள்ளது.  

கொச்சி விமான நிலையம்: 

கொச்சி விமான நிலையம் செல்வோர் (ஹஜ் / உம்ரா செல்வோர், கொச்சி வழியாக அரபு நாடு செல்வோர்) எர்ணாக்குளம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மெட்ரோ  ரயிலில் ஆலுவா மெட்ரோ நிலையம் சென்று அங்கிருந்து விமான நிலையம் செல்லலாம்.  அல்லது எர்ணாக்குளம் ரயில்நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்கு நேரடி பேருந்து வசதிகளும் உள்ளது.  

திருவனந்தபுரம் விமான நிலையம்

திருவனந்தபுரம் விமான நிலையம் செல்வோர் கொல்லம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் பாசஞ்சர் ரயிலில் அல்லது பேருந்தில் திருவனந்தபுரம் விமான நிலையம் செல்லலாம். 

சபரிமலை 

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல நினைப்பவர்கள் இந்த இரயிலில் பயணம் செய்து புனலூர் அல்லது தென் மலை இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் பம்பை அடைந்து அங்கிருந்து சபரிமலைக்கு சென்றடையலாம்...

 தென்மாவட்டங்கள் :

தமிழ்நாடு அரசு சின்னமான திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செல்பவர்கள் இந்த இரயிலில் பயணம் செய்து இராஜபாளையம் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து மூலமாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலை அடையலாம்

மேலும் தென்மாவட்டங்கள் செல்வார் விருதுநகரில் இறங்கி திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் அல்லது பெங்களூர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்ஸை பயன்படுத்தி திருநெல்வேலி, நாகர்காவில் செல்லலாம். 

 முக்கிய சுற்றுலா இடங்கள் கேரளா : 

தென்மலை சுற்றுலா செல்வோர் தென்மலை ரயில் நிலையத்தில் இறங்கி கொள்ளலாம். கொல்லம் படகு சவாரி, வர்க்கலா கடற்கரை, எடவா, ஜத்தயு பாறை கற்றுலா செல்வோர் கொல்லம் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.  குமரகோம் படகு சவாரி செல்வோர், வாகமான் மலை பிரதேசம் செல்வார், மூணார் மலை பிரதேசம் செல்வார் கோட்டயம் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலா செல்வோர் எர்ணாக்குளம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி கொள்ளலாம். 

காரைக்கால் நாகூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி: 

அதிகாலையில் காரைக்கால்  நாகூர் தர்ஹா நாகப்பட்டினம் வேளாங்கண்ணி சர்ச் சென்று மாலை வீடு திரும்புவோரும் இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளலாம்.

அறந்தாங்கியில் இருந்து நாகூர் தர்ஹா செல்பவர்கள் நாகப்பட்டினம் இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் நாகூர் தர்ஹாவை சென்றடையலாம் பின்னர் அங்கிருந்து வேளாங்கண்ணி செல்ல நினைப்பவர்கள் நாகூரில் இருந்து காரைக்கால் - வேளாங்கண்ணி விரைவு இரயில் பயணம் செய்து வேளாங்கண்ணிக்கு சென்றடையலாம் பின்னர் அங்கிருந்து அறந்தாங்கிக்கு வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விரைவு இரயிலில் பயணம் செய்து அறந்தாங்கியை அடையாளம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments